வெயிலால் செயல் இழந்த வாக்கு எந்திரங்கள்!

மகாராஷ்டிரா: கடுமையான வெயிலால் வாக்கு எந்திரங்கள் செயல் இழந்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நாடுமுழுவதும் 4 மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தல்களில் எதிர்கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளர்களை நிறுத்தி பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் பண்டாரா-கோண்டியா தொகுதியிலும் தேர்தல் நடைபெற்றது.
பாஜக எம்பியாக இருந்த நானா படோல் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.  பாஜக சார்பில் ஹேமந்த் படோல் களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் கடந்த முறை பாஜகவிடம் தோல்வியடைந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல். இவர் பலமுறை அங்கு வெற்றி பெற்றவர். இந்த முறை அவருக்கு பதில் மதுகர் போட்டியிடுகிறார். அவருக்கு சிவசேனா, அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பல வாக்கு மையங்களில் எந்திரங்கள் வேலை செய்யவில்லை. வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் கடுமையான கோடை வெப்பம் நிலவி வருவதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் சீட்டு வழங்கும் வகையில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இதுபோன்ற பிரச்சினை எழுந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here