வங்கியில் ரூ.6 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை!!

திருவள்ளூர்: திருவள்ளூர் ஜேஎன் சாலையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி தனியார் கட்டிடத்தில் முதல் மாடியில் இயங்கி வருகிறது.லாக்கர் வசதியுள்ள இந்த கிளையில் வாடிக்கையாளர்களின் தங்கநகைகள் லாக்கரில் வைக்க்ப்பட்டிருந்தன. வங்கியின் கீழ்
தளத்தில் நீல்கிரிஸ் இயங்கி வருகிறது.இன்று வங்கியை திறந்து உள்ளே சென்ற அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். தரை தளத்தில் பெரிய துளையும், லாக்கர் அறையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.லாக்கர்கள் உடைக்கப்பட்டு ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடித்துள்ளனர் என வங்கி அதிகாரி தெரிவித்தார்.வங்கி இரண்டு நாள் விடுமுறை என்பதை பயன்படுத்தி இந்த கொள்ளை நடந்துள்ளது.கொள்ளையர்கள் எப்படி உள்ளே வந்தனர், எப்படி கொள்ளையடித்துவிட்டு வெளியே சென்றனர் என்பது மர்மமாகவே உள்ளது.சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி வங்கி அதிகாரிகளிடம் நகை கொள்ளை குறித்து விசாரணை நடத்தினார். திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here