மைக்ரேனுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!

அமெரிக்கா:மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலிக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.’எய்மோவிக்’ எனப்படும் ஊசி மருந்தை ஒரு முறை உடலில் செலுத்தினால்போதும் 30நாட்கள் வரை மைக்ரேன் வருவதில் இருந்து பாதுகாக்க முடியும்.
மைக்ரேனுக்கு மருந்தாக காக்கைவலிப்பை குணப்படுத்தும் சில வேதிப்பொருட்கள், பொடாக்ஸ் எனப்படும் சுருக்கங்களை நீக்கும் மருந்து ஆகியவை பயன்பாட்டில் உள்ளன.இருப்பினும் அவற்றால் எதிர்பார்த்த பலன் இல்லை என்று பரவலான கருத்து நிலவுகிறது.
மைக்ரேனுக்கு பல்வேறு நிறுவனங்கள் மருந்து தயாரிக்கும் பணியில் உள்ளன.
கலிபோர்னியாவை சேர்ந்த அம்ஜன், சுவிஸ் நாட்டைச்சேர்ந்த நோவார்டிஸ் ஆகியவை இணைந்து ‘எய்மோவிக்’-ஐ கண்டுபிடித்துள்ளன.

இம்மருந்து மைக்ரேனை வரவழைக்கும் ஜீன்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் சிஜிஆர்பி அளவை கட்டுக்குள் வைக்கிறது இம்மருந்து. எனவே, இவற்றின் பலன் நன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here