கோலாலம்பூர்-சிங்கப்பூர் புல்லட் ரயில் திட்டம் ரத்து!

கோலாலம்பூர்: ஜிஎஸ்டி வரி திட்டத்தை ரத்துசெய்துள்ள மலேசியா அரசு புல்லட் ரயில் திட்டத்தையும் ரத்து செய்ய உள்ளது.
மலேசியா சிங்கப்பூர் இடையே 2016ல் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதன்படி கோலாலம்பூர்-சிங்கப்பூர் நகரங்களுக்கு இடையே அதிவேக புல்லட் ரயில் இயக்கமுடிவானது.
ஒன்றரை மணிநேரத்தில் இதனால் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லமுடியும்.
புல்லட்ரயில் பணிகள் தொடங்கப்பட்டு டெண்டர்கள் விடப்பட்டன.
கட்டுமான பணிகள் தொடங்கவிருந்த நிலையில் தேர்தல்வந்து மலேசியாவில் ஆட்சிமாற்றம் நடந்தது.புதிய பிரதமர் மகாதீர்முகமது புல்லட் ரயில் திட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இதனால் ஒரு பைசா அரசுக்கு பிரயோஜனம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் பொருளாதார நெருக்கடி அபாயத்தை தவிர்க்கவேண்டும் இதனால் செலவு, முதலீடுகளில் தீவிரகவனம் செலுத்துகிறேன்.110பில்லியன் ரிங்கட் மதிப்புள்ள புல்லட் ரயில் திட்டத்தை கைவிட சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இவ்வாறு பிரதமர் மகாதீர்முகமது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here