ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி! சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது!!

மும்பை: 11-ஆவது ஐபிஎல் சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்அணியும் களமிறங்கியது.டாஸ் வின் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. சிஹர் தவான் மற்றும் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி ஆகியோர் சன் ரைசர்ஸ் அணி சார்பாக முதலில் களமிறங்கினர். இரண்டாவது ஓவர் முடிவதற்குள் கோஸ்வாமி  ரன் – அவுட் செய்யப்பட்டார். 13/1 என்ற சூழலில் ஆட்டம் மீண்டும் துவங்கியது.
அதன்பிறகு வில்லியம்சன் களமிறங்கினார், சிஹர் தவானும் வில்லியம்சன்னும் சேர்ந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அடைந்தனர். தவான் 26 ரன்கள் என்ற நிலையில் ஆட்டமிழந்தார்.பின்னர் வில்லியம்சன் ஜோடியாக சஹிப் அல்ஹசன் இறங்கினார். இந்த ஜோடி 105 ரன்கள் என்ற நிலையில் முறிந்தது. வில்லியம்சன் 47 ரன்களில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அதன்பிறகு சஹிப்புடன் யூசப் பதான் களமிறங்கினார்.
105 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் ஆட்டத்தை தொடர்ந்த இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 133 ரன்கள் என்ற நிலையில் சஹிப், ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு இறங்கிய தீபக் கூடா 3 ரன்கள் மட்டுமே எடுத்து 144 ரன்கள் என்ற நிலையில் ஆட்டமிழந்தார்.144/5 என்ற சூழலில் பிரத்வொய்ட், பதானுக்கு ஜோடியாக களமிறங்கினார். ஓவரின் கடைசி பாலில் பிரத்வொய்ட்டும் ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதரபாத் அணி 178 ரன்களை எடுத்தது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. ஷேன் வாட்சன் மற்றும் டூப்லஸிஸ் ஆகியோர் இணைந்து ஆட்டத்தை துவங்கினர். புவனேஷ்குமாரின் முதல் ஓவரில் திணறிய வாட்சன், ஒரு பந்தை கூட அடிக்காமல் மெய்டனாக்கினார். துவக்கம் சென்னை அணிக்கு மோசமாக இருந்தது 4 ஓவருக்கு 14 ரன்கள் என்ற நிலையில் டூப்லஸிஸ் ஆட்டமிழந்தார்.பின்னர் வாட்சனுக்கு ஜோடியாக சுரேஷ் ரெய்னா களத்தில் இறங்கினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை கடந்தது. 133 ரன்கள் என்ற நிலையில் ரெய்னா ஆட்டமிழந்தார்.இதனையடுத்து அம்பதி ராயுடு, வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி சென்னை அணியை  வெற்றிபெறச் செய்தனர். 181 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி, சன்ரைசர்ஸ் அணியை வென்றது. 117 ரன்கள் குவித்த வாட்சனுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here