அப்பாக்கள் அணியின் தப்பாத வெற்றி!

மும்பை:ஐபிஎல் கோப்பையை வென்ற குஷியில் இருந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: 2ஆண்டுகளுக்குப்பின்னர் களம் இறங்கியபோதே இந்த முறை வெற்றிபெற்று சாதனை படைக்க வேண்டும் என்று உறுதி எடுத்தேன்.இதே உறுதியை அணியில் உள்ள ஒவ்வொருவரிடமும் பார்த்தேன். அணியின் வீரர்கள் பலர் 30வயதை கடந்தவர்களாக உள்ளனர். எங்கள் அணியை அப்பாக்கள் அணி என்று கூட சிலர் விமர்சனம் செய்தனர்.  ஆனால் வெற்றி என்ற எங்கள் இலக்கில் தப்பாமல் இருந்துவிட்டோம்.விளையாட்டில் ஒரு வீரரின் வயது குறித்து கவலை கொள்ள வேண்டியது கிடையாது. அது ஒரு பிரச்சனையே இல்லை. நல்ல உடல்தகுதிதான் முக்கியம்.  அம்பதி ராயுடுவை பாருங்கள். அவர் சிறப்பான உடற்தகுதியுடன் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிப்போட்டியில் மிடில் ஆர்டர் மீதுதான் மிகவும்நம்பிக்கை வைத்திருந்தேன். டுபெல்சியை முதலில், அம்பதியை பின்வரிசையில் இறக்கியதில் பெரிய வியூகம் என்று ஏதும் இல்லை. 

எங்கள் வெற்றிக்கு எண் ஜோதிடம் கைகொடுத்தது என்று கூறுகிறார்கள். 27ம் தேதி. 7வது போட்டி. எனது ஜெர்சி எண்7 என்றெல்லாம் வரிசைப்படுத்துகிறார்கள்.  அவற்றையெல்லாம் காரணம் என்று கூறினால் எங்கள் ஆட்டத்தை, திறமையை என்னவென்று கூறுவது. நாங்கள் சிறப்பாக ஆடினோம். வெற்றிபெற்றோம்.  இவ்வாறு டோனி பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here