ஏடிஎம்ல் கள்ள நோட்டா? வங்கி வாடிக்கையாளர் அதிர்ச்சி!

நாமக்கல்: நாமக்கல மாவட்டம் மோகனூர் பாலப்பட்டியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்ல் அதே பகுதியை சேர்ந்தவர் ஐந்தாயிரம ரூபாய் எடுத்துள்ளார்.இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இரண்டும் ஐநூறு ரூபாய் நோட்கள் இரண்டு மற்றும் நூறு ரூபாய் நோட்டுகள் ஐந்து என மொத்தம் 5ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. அதை சரிபார்த்தவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.ஐநூறு ரூபாய் நோட்டின் ஒரு பகுதி அச்சிடாமல் வெறுமென இருந்துள்ளது. பணம் எடுத்தவர் கள்ளநோட்டு எப்படி ஏடிஎம் மிசினில் வந்தது என்று புலம்பியுள்ளார். அங்கிருந்தவர்கள் வங்கிக்கு சென்று இது குறித்து கூறுங்கள் அவர்கள் கள்ள நோட்டா
இல்லையா என்பதை உறுதி செய்வார்கள் என ஆலோசனை தெரிவித்துள்ளனர்.குறிப்பிட்ட முறைக்கு மேல் ஏடிஎம்ல் பணம் எடுத்தால் பிடித்தம் செய்யும் வங்கிகள் இது போன்ற சிரமத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here