அமெரிக்கா, வடகொரிய அதிபர்கள் திட்டமிட்டபடி சந்திப்பு!

கொரியா: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் மலேசியாவில் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர்.
ஜூன்12ம் தேதி அதிபர்கள் சந்திப்பு நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
வடகொரியா தனது அணுஆயுத சோதனை நடைபெறும் ஆய்வகத்தை அழித்தது. இதனை டிரம்ப் வரவேற்றார்.
அதேநேரம், அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது கிம்ஜாங் உன்னை கோபப்படுத்தியது.அமெரிக்க அதிபரை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். இதனால் நிலைமை மேலும் மோசமானது.

 

இந்நிலையில், திட்டமிட்டபடி ஜூன்12ம் தேதி கிம்ஜாங் உன், டிரம்ப் இடையே சந்திப்பு நிகழும்.
அவர்கள் கொரியா எல்லையில் உள்ள நகரம் ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இப்பேச்சுவார்த்தையில் தென்கொரிய அதிபரும் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே, வடகொரியாவின் எல்லை நகரமான பன்முஞ்சோம் நகரில் வடகொரியா, தென்கொரியா அதிபர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டனர்.
கொரிய தீபகற்பத்தின் வளர்ச்சி, நலன் தொடர்பாக 2மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிபர் டிரம்ப், கிம்ஜாங் உன் சந்திப்பு குறித்து இறுதிசெய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here