சிறுவனின் தொண்டையில் சிக்கிய 2 ரூபாய் நாணயம்!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் ஜலனா பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் கிருஷ்ணா ராஜ்புட். அவரது தாத்தா கிருஷ்ணாவுக்கு பிஸ்கட், மிட்டாய் வாங்க பணம் கொடுத்துள்ளார்.அதிலிருந்த இரண்டு ரூபாய் நாணயத்தை தற்செயலாக விழுங்கிவிட்டார். இதனால் பேசுவதற்கும், சுவாசிப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.என்ன நடந்தது என தெரியாமல் கிருஷ்ணாவின் குடும்பத்தார் அவனை நாசிக் மருத்துவமனையில் சேர்த்தனர்.கிருஷ்ணா சுவாச பிரச்சனையால் அவதிப்படுவதை கண்ட டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்தனர்.தொண்டைப்பகுதியில் நாணயம் இருப்பதை கண்டனர். உடனடியாக விரைந்து
செயல்பட்ட டாக்டர்கள் எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் சிறுவனின் தொண்டையிலிருந்து நாணயத்தை அகற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here