தூத்துக்குடியில் 144 தடையுத்தரவு வாபஸ்!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22ம் தேதி நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடுநடந்தது. இதில 13 பேர் பலியாகினர்.இதையடுத்து ஆங்காங்கே கலவரங்கள் ஏற்பட்டன. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர 144 தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் இணையதள சேவை முடக்கப்பட்டது. நீதிமன்ற தலையீட்டால் கன்னியாகுமாரி, திருநெல்வேலியில் இணையதள சேவை மீண்டும் தரப்பட்டது.
கடந்த 4 நாட்களாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது சகஜ நிலை திரும்பிவருவதால் 144 தடையுத்தரவு விலக்கி கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here