ரயிலில் பாலியல் வன்கொடுமை! கழிவறையில் தன்னைதானே பூட்டி தற்காத்த பெண்!!

ராஜஸ்தான்: ஓடும் ரயிலில் குடிபோதையில் பாலியல் தொல்லை அளித்த ராணுவ வீரரிடமிருந்து தன்னைதானே காத்துக் கொள்ள பெண் ஒருவர் ரயிலின் கழிவறையில் உள்பக்கமாக பூட்டி தற்காத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து டெல்லி நோக்கி சென்ற துரண்டோ விரைவு ரயிலில் பெண் ஒருவர் கோட்டாவிலிருந்து தனியாக பயணம் செய்தார்.அதே ரயில்பெட்டியில் ராணுவ அதிகாரி தனது நண்பர்களுடன் ரயிலில் மது குடித்துக் கொண்டே பயணித்துள்ளனர். குடிபோதையில் ராணுவ அதிகாரி அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.அப்பெண் தன்னை தற்காத்துக் கொள்ள ரயிலிலுள்ள கழிவறையில் சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தன்னைத்தானே தற்காத்துக் கொண்டார்.ரயில் டெல்லி வந்ததும் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ராணுவ வீரரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here