நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை! பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!

டெல்லி: டெல்லி முதல் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரையிலான அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.11 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வழிச் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம் 135 கி.மீ நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் வேகத்தை சிறப்பு கேமரா மூலம் கண்காணித்து தானாகவே அபராதம் விதிக்கும் வசதியும், ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திற்கு மழைநீர் சேமிப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த நெடுஞ்சாலையில் இந்தியாவின் 36 நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையின் மூலம் டெல்லியின் காற்று மாசு 27 சதவீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய ஸ்மார்ட் நெடுஞ்சாலை வழியாக டெல்லியில் இருந்து 85 கி.மீ தூரத்தில் உள்ள மீரட் நகரை 45 நிமிட பயண நேரத்தில் சென்றடையலாம். முன்னதாக, இதன் பயண நேரம் 2 மணி நேரமாக இருந்தது. மேலும் ஹிமாச்சலப்பிரதேசத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் செல்பவர்களும், ராஜஸ்தானில் இருந்து ஹிமாச்சலப்பிரதேசம்
செல்பவர்களும் டெல்லிக்குள் வராமலேயே செல்ல முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here