அரசு மருத்துவமனையின் அவலம்! நோயாளிகளுடன் ஓய்வு எடுக்கும் தெரு நாய்கள்!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனை ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெருநாய்களும் இருக்கும் அதிர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியு்ளளதால் மக்களிடையே கண்டனம் எழுந்துள்ளது.ஹர்தோய் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெரு நாய்கள் கட்டிலுக்கு கீழே படுத்திருக்கிறது. நோயாளிகள் சார்பில் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர்கள் நீங்களே நாய்களைத் துரத்தி விடுங்கள் என அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆறு மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தெரு நாய்கள் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here