மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்பு திருட்டு?

சேலம்: ஓட்டுநர் மணிகண்டன் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கில்லிகுரிஷி பகுதியைச் சேர்ந்தவர். காரில் சென்னைக்க வந்த போது விபத்தில் சிக்கி காயமடைந்தார்.சேலம் விநாயக மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த 22ம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிகிச்சை கட்டணமாக ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் செலுத்துமாறு மணிகண்டனின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளது. பணம் இல்லை என்று கூறியதையடுத்து உடலுறுப்புகளை எடுத்துக்கொண்டு உடலை குடும்பத்தாரிடம் நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. தங்களிடம் கட்டாயப்படுத்தி கையேழுத்து வாங்கியதாக குடும்பத்தார் கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்தனர்.

கேரள முதல்வர் முகநூலில் இது குறித்து பதிவு செய்தார். தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். விளக்கம் கேட்டு தமிழக சுகாதாரதுறை உத்தரவிட்டது. சேலம் விநாயக மிஷன் மருத்துவமனை குடும்பத்தாரிடம் சட்டத்துக்கு உட்பட்டு முறைப்படி ஒப்புதல் பெற்ற பின்னரே உடலுறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here