குஜராத்தில் 5 மாதங்களில் 111 குழந்தைகள் உயிரிழப்பு!

குஜராத்: குஜராத் புஜ் பகுதியில் அதானி தொண்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் ஜி.கே. மருத்துவமனையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்து மே 20ம் தேதி வரை 111 குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிவித்தள்ளது.குஜராத் ஆணையர் ஜெயந்தி ரவி இது குறித்து கூறுகையில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்ட சத்து குறைபாடு, தாமதமாக மருத்தவமனைக்கு வருவது போன்ற காரணங்களால் குழந்தைகள் இறக்கின்றன. இது குறித்து விசாரிக்க சிறப்பு குழு விசாரிக்க உத்தரவிட்டுள்ளது என்றார்.இந்த ஆண்டில் இதற்கு மேல் இறப்பு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து மக்கள் வருவதால் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில்லை. இதனால் குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளன.எங்கள் ஊழியர்கள் இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வருகிறார்கள். இறப்புகளை குறைக்க தேவையான நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளோம் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் ராவ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here