பாலியல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காவலர்!

மஹாராஷ்டிரா: காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வரும் 29 வயதான லலிதா சால்வே மகாராஷ்டிர மாநிலம்பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.நான்கு ஆண்டுகளுக்கு முன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக மருத்துவரிடம் கலந்தாலோசித்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் “ஒய்” குரோமோசோம்கள் அதிக அளவில் இருந்ததை லலிதாவிடம் தெரிவித்துள்ளனர்.பாலியல் அறுவை சிகிச்சை செய்ய விறும்பிய லலிதா தான் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் தான் மிகவும் விரும்பும் காவல் துறையில் தொடர்ந்து பணியாற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசிடம் விண்ணப்பித்து காத்திருந்தார்.மஹாராஷ்டிரா முதல்வர் அனுமதி அளித்ததையடுத்து கடந்த 21ம் தேதி பாலியல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு லலிதா சாலவே என்னும் தன் பெயரை லலித் என்று மாற்றிக் கொண்டார். அறுவை சிகிச்சை தனக்கு மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here