போலிஸ் காவலில் சட்டவிரோதமாக 95 பேர் சித்ரவதை!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் 14 பேர் கவலைகிடமாக உள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.போராட்டத்தில் கலந்து கொண்ட பலர் சட்டவிரோதமாக கைது செய்து சித்ரவதை செய்வதாக செய்தி பரவியது. தூத்துக்குடி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற தலைமை நீதிபதி பகவதி அம்மாளிடம் வழக்கறிஞர் சந்திரசேகர்
சட்டவிரோதமாக கைது செய்தவர்களை விடுதலை செய்ய மனு தாக்கல் செய்தார்.விளாத்திக்குளம் நீதிபதி காளிமுத்துவேல் வல்லநாடு துப்பாக்கி பயிற்சி சரகத்தில் நேரில் ஆய்வு செய்ததில் 95 இளைஞர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்தார்.வழக்கு பதிவு செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் எனும் நீதிபதியின் உத்தரவையடுத்து போலீசார் 65 பேர் வழக்கு பதிவு செய்து 30 பேரை விடுதலை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here