உடல் எடையை குறைக்கும் ஆரஞ்சு பழம்!

நாம் உண்ணும் இந்த ஆரஞ்சுப் பழத்தை கமலா பழம் எனவும் அழைக்கலாம். ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் ஏ, பி-1, பி-2, சி-19 உள்ளது.நோயாளியின் உடல் மேலும் சோர்வடையாமல் இருக்க ஆரஞ்சுப் பழச்சாறு சக்தியை கொடுக்கிறது.
குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு சிறந்த உணவாகப் பயன்படுகிறது. கைக்குழந்தைகளுகுக்கு ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் சரிபாதி அளவு தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு வயது குழந்தைகளுக்கு உரித்துக் கொடுத்து உண்ணச் சொல்லலாம்.
அஜீரணக் குறைபாடுகளைச் சரிசெய்யும். பற்கள் தொடர்பான அனைத்துக்
குறைபாடுகளையும் நீக்கும் தன்மை கொண்டது.ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது.
உடல் எடையை குறைக்க நினைப்போர் ஆரஞ்சு பழத்தை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் அதிலுள்ள வைட்டமின் சி கல்லீரலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும்.ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.
அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இப்பழத்தில் மூட்டுகளில் வலியோ, வீக்கங்களோ இருந்தால் ஆரஞ்சு ஜூஸை தினமும் குடித்து வந்தால் குணமாகும்.
ஆரஞ்சில் உள்ள மக்னீசியம், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் இப்பழத்தை
சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தமானது சீரடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here