குடிநீருக்காக மரணப் போராட்டம்!

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசம் தின்டோரி சாஹ்புரா கிராமத்தில் குடிநீருக்கு வரலாறு காணாத அளவிற்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது.தண்ணீருக்கான நீர் ஆதாரங்கள் வறண்டு விட்ட நிலையில் இந்த கிராம மக்கள் ஊருக்கு வெளிளே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்கின்றனர்.கிணற்றில் 40 அடி ஆழத்தில் உள்ள சிறிதளவு தண்ணீரை எடுக்க ஆபத்தான முறையில் கிணற்றில் இறங்கி உயிரை பற்றி கவலைப்படாமல் இந்த செயலில் ஈடுபடுகின்றனர். இது குறித்த விடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை
ஏற்படுத்தின.தினமும் 2 லாரிகளில் தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here