நடிகர் வடிவேலுக்கு கெடு! நடிக்க மறுத்தால் தடை!!

சென்னை: இயக்குனர் ஷங்கரின், நடிகர் வடிவேல் நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  அதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் தயாரிக்க திட்டமிட்டார்.இதற்காக வடிவேலுக்கு குறிப்பிட்ட தொகையை முன்பணம் கொடுக்கப்பட்டது. படத்தை சிம்புதேவன் இயக்க முடிவானது. இதற்காக சென்னையில் பல கோடி செலவில் அரண்மனை செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது.
படத்தில் நடித்து வந்த வடிவேலு தீடிரென பாதியில் விலிகியதால் படப்பிடிப்பு நின்றது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு நடித்து தர வேண்டும் என ஷங்கர் மனு அளித்தார். நடிகர் சங்கம் வடிவேலுக்கு நோட்ஸ் அனுப்பியது.
படப்பிடிப்பு தாமதமாக தொடங்கியதால் தனக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதாக வடிவேல் நடிக்க மறுத்தார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க கெடு விதித்து ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் மறுத்தால் வடிவேல் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here