எடைகுறைக்கும் சிகிச்சையால் கேன்சர் தடுக்கப்படும்!

ஸ்வீடன்: எடைக்குறைக்கும் சிகிச்சையால் கேன்சர் வருவதற்கான அபாயம் குறையும் என்று தெரியவந்துள்ளது. ஸ்வீடன் நாட்டில் உள்ள கொதன்பர்க் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆராய்ச்சி நடந்துள்ளது.அங்குள்ள முதுநிலை மருத்துவமாணவர்கள் உடல்பருமன், தொப்பையால் பாதிக்கப்படுவோர் குறித்து ஆய்வு நடத்தினர். சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.அதில் உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது.இதனால் தோல்நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 61சதவீதம் குறைகிறது. மேலும் தோல்சம்பந்தமான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் 42சதவீதம் குறைகிறது.உடல் எடைகுறைவதற்கான ஆபரேசன் முடிந்த ஓராண்டு முதல் 18ஆண்டுவரை தோல் சம்பந்தமான நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here