பாம்பு கடித்த தாயிடம் பால்குடித்த குழந்தையும் பலி!

உத்தரப்பிரதேசம்: முசாபர்நகர் அருகே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
2வயதானபோதும் குழந்தைக்கு தினமும் தாய்ப்பால் கொடுத்து வந்தார் அந்தப்பெண்.
சம்பவத்தன்று அப்பெண்ணின் காலை பாம்பு கடித்துள்ளது. 

அதுகுறித்து தெரியாமலேயே அப்பெண் குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் தாயும், மகளும் வாயில் நுரையில்தள்ள உயிருக்கு போராடிவந்தனர்.

குடும்பத்தினர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே இருவரும் இறந்துள்ளனர்.
வீட்டின் அடுப்பங்கரையில் பதுங்கியிருந்த பாம்பு மறுநாள் பிடிபட்டுள்ளது.
இந்தியாவில் பாம்புகடித்து ஆண்டுதோறும் 40ஆயிரம் பேர் இறந்துவருகின்றனர். உலகளவில் பாம்புக்கடியால் உயிரிழக்கும் பேரில் ஒருவர் இந்தியர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here