கோயில் யானை தாக்கி பாகன் பலி!

திருச்சி: சமயபுரம் கோவில் 5 வயது பெண் யானை மசினி்க்கு இன்று காலை மதம் பிடித்ததால் பக்தர்களை துரத்தியது. யானையை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற யானை பாகன் கஜேந்திரனை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.பக்தர்கள் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.யானையை உள்ளே அடைத்து வைக்கப்பட்டுள்ளது. கோயில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது. தகவலறிந்து காவல் துறையினரும் வனத்துறையினரும் விரைந்து வந்தனர்.பயிற்சி பெற்ற 6 பாகன்களை வரவழைத்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்துனர். பலியான கஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். யானைக்கு மதம் பிடிப்பதற்கு சற்று முன் அமைச்சர் துரைக்கண்ணு வந்து சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here