மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை! ஆசிரியை கைது!!

சண்டிகர்: உமா சண்டிகரின் ராம்தர்பார் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் அறிவியல் ஆசிரியராக பணியில் உள்ளார். வீட்டிலும் டியூசன் எடுத்து வருகிறார்.அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள 10ம் வகுப்பு படிக்கும் மாணவனும் அவரின் தங்கையும் உமாவிடம் டியூசன் படிக்க சேர்ந்துள்ளனர். மாணவனுக்கு தனியாக பாடம் நடத்த வேண்டும் என கூறி இருவருக்கும் வெவ்வேறு நேரங்களில் வரவழைத்துள்ளார்.இதை பயன்படுத்தி மாணவனுடன் உமா பாலியல் ரீதியாக தொடர்பு ஏற்படுத்தி கொண்டுள்ளார். அவரை தொடர்பு கொள்ள தனி சிம் கார்டு ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். மாணவனின் மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் டியூசன் அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.மாணவனின் வீட்டிற்கு சென்ற ஆசிரியை மாணவனை தன்னிடம் படிக்க அனுப்புமாறும் மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல் விட்டுள்ளார். மாணவனின் பெற்றோர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை செய்து உமாவை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here