ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்!

டெல்லி:பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
எதிர்வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்த உள்ளது.ஒரேநாடு ஒரேவரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி எனப்படும் சரக்குமற்றும்போக்குவரத்து வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும்.
இல்லாவிடில் நாடுதழுவிய போராட்டம் நடத்தி விலை குறைக்கவைப்போம் என்று பிரதமருக்கு சவால் விடுத்துள்ளார்.
பல மாநிலங்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து வருகின்றன.டைனமிக் சிஸ்டம் என்ற தினந்தோறும் விலை நிர்ணயதிட்டத்தால் பெட்ரோல் விலை ஒரு நாள் குறைந்தால் 30நாள் உயர்கிறது.
பெட்ரோலிய பொருட்களுக்கு தரப்பட்ட மானியத்தை குறைத்துக்கொண்டதால் இவ்விலையேற்றம் தவிர்க்கமுடியாது என்று கூறப்படுகிறது.27வது ஜிஎஸ்டி கூட்டம் அடுத்தமாதம் கூடுகையில் அனைத்துமாநில அரசுகளிடம் பெட்ரோல், டீசல் வரிவிதிப்பு குறித்து சம்மதம் கோரப்படும். அனைத்து மாநிலங்களும் சம்மதிக்கும் பட்சத்தில் அவற்றிடம் இருந்து மத்திய அரசுக்கு குறிப்பிட்ட சதவீதம் பணம் கட்டாயம் ஒதுக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும்.
ஜிஎஸ்டி வரியால் மாநில அரசுகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே, மாநிலங்கள் இதனை வரவேற்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here