லிப்டில் சிக்கிய சிறுவன் பரிதாப பலி!

காச்சேகுடா: லிப்டில் சிக்கிய பேப்பர் போடும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
காச்சேகுடா சப்பல்பஜாரை சேர்ந்த சிறுவன் சூரிவேணு.
இச்சிறுவன் காலைவேளையில் பிரகாஷ் என்பவரிடம் செய்தித்தாள் வாங்கி வீடுகளுக்கு விநியோகித்துவந்தான்.பகுதிநேரமாக இவ்வேலையை பார்த்துக்கொண்டே படித்துவந்தார் சூரிவேணு.
நேற்று சந்ரேஷ் ஜெயின் கட்டிடத்தில் 3வது மாடியில் பேப்பர்களை விநியோகித்து திரும்பிக்கொண்டிருந்தார்.
லிப்டில் இருந்து வெளியே செல்லும் முன் லிப்டின் 2 கேட்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டார்.லிப்ட் கிரிலின் இடைவெளி வழியாக கையை நுழைத்து திறக்கமுயன்றார்.
ஆனால் கை தவறுதலாக லிப்டை மேலே செல்லவைக்கும் பொத்தானை அழுத்தியது.
இதனால் லிப்ட் உடலுடன் மேலே செல்ல தொடங்கி தரைத்தளத்தின் நிலையில் மோதியது.
அதில் சிக்கிய சூரிவேணு பரிதாபமாக உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here