நோன்பை முறித்து ரத்ததானம்! இந்துச்சிறுவனுக்கு முஸ்லிம் வாலிபர் உதவி!!

பிகார்:இந்து சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முஸ்லிம் இளைஞர் ஒருவர் நோன்பை முறித்து இரத்த தானம் செய்துள்ளார்.பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள ராஜேஷ் என்ற சிறுவனுக்கு தலசீமியா என்ற நோய் பாதிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக ரத்தம் தேவைப் பட்டது. அந்த அரிய வகை குரூப் ரத்தம் மருத்துவமனையில் இல்லை.உடனே இதுகுறித்து அன்வர் ஹுசேன் என்ற ரத்த தான குழு தலைவருக்கு தகவல் தரப்பட்டது. சிறுவனின் அரிய வகை ரத்தமும் அன்வர் ஹுசேனின் நண்பர் ஜாவேத் ஆலம் என்பவரின் ரத்தமும் ஒரே வகை. அன்வர் ஹுசேன் இதுகுறித்து ஜாவேத் ஆலத்திற்கு தகவல் கொடுத்தார்.புனித ரமலான் மாதம் நடைபெறுவதால் நோன்பு வைத்துள்ளார் ஜவேத் ஆலம். ரத்தம் வெளியானால் நோன்பு முறிந்து விடும். இருப்பினும் ஒரு சிறுவனின் உயிருக்காக நோன்பை முறிப்பதில் தவறில்லை என்று அவர் முடிவுக்கு வந்தார்.
எல்லாவற்றையும் விட சிறந்தது சமூகத்தின்நலம்தான் என்று எனக்கு திருக்குரான் கூறியுள்ளது.
எனவே, ஒரு உயிரைக்காக்க நான் ரத்ததானம் செய்கிறேன் எனக்கூறினார் ஜவேத் ஆலம்.
பழரசம் குடித்து தனது நோன்பை முறித்துக்கொண்டு சிறுவனுக்கு ரத்ததானம் செய்தார்.

தலசீமியா என்பது கொடிய மரபணுநோய் ஆகும்.
ஹிமோகுளோபின் புரதக் கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகள் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன.
இதனால் இந்நோய் கண்ட குழந்தைகள் ரத்த சோகையால் மரணமடைகின்றன. அவர்கள் உயிர்பிழைக்க தொடர்ந்து ரத்தம் ஏற்றப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here