கட்டியணைத்து காப்பாற்றிய போலீஸ்!

உத்திரகாண்ட்: உத்திரகாண்ட் நைனிடால் உள்ள கோயிலில் முஸ்லீம் இளைஞர் தனது தோழியுடன் சிரித்த பேசி கொண்டிருந்தனர்.சிலர் அவர்களை நோக்கி வந்துள்ளனர். இதைப்பார்த்த பெண் அங்கிருந்து சென்று விட்டார். இளைஞரை சூழ்ந்துகொண்ட கும்பல் கோவில் என்றும் பாராமல் வசை பாடியுள்ளனர்.மேலும் அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். அதை பார்த்து பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்தீப் சிங் பேடி அவர்களை தடுத்து விசாரணை செய்துள்ளார். விசாரிக்கும் போதே மீண்டும் தாக்க தொடங்கியுள்ளனர்.விரைந்து செயல்பட்ட சுகன்தீப் சிங் அந்த இளைஞரை கட்டியணைத்தவாறே வெளியே அழைத்து வந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். சப்-இன்ஸ்பெக்ரின் செயலை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். இது குறித்த விடியோ, புகைப்படம்
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here