மேகுனு புயலால் ஓமன் நகரங்கள் சின்னாபின்னம்!

சவுதிஅரேபியா: ஓமனில் புயல் சின்னத்தால் பல நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஓமனில் மேகுனு புயல் பாதித்துள்ளது. புயல் கரையை கடப்பதால் மேலும் ஒரு நாள் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சொகோட்ரா நகரம் புயலால் சின்னாபின்னமாகி உள்ளது. அந்நகரில் அவசரநிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ளது.
நகரில் மீட்புப்பணிகளுக்காக முழுவீச்சில் சவுதி அரேபியா உதவி செய்து வருகிறது.
அந்நகரில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு விமானத்தில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.

மக்கள் தங்குவதற்காக தற்காலிக வசிப்பிடங்கள் பள்ளிகள், மசூதிகள் ஆகியவற்றில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஓமனுக்கு உதவிப்பொருட்கள் கொண்டுவந்த கப்பலும் புயலில் சிக்கியது. எனவே பொருட்கள் வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.புயலில் சிக்கி 17பேர் மாயமாகி உள்ளனர். 2படகுகள், 4கார்கள் வெள்ளத்தில் சிக்கின.
புயல் மழையால் சலாலா நகர் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.
மணிக்கு 475கிலோ மீட்டர் வேகத்தில் அகோரமாக காற்றும் மழையும் தந்தபடி சோகோட்ராவின் வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்துவருகிறது புயல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here