இன்னும் வரவில்லையே ’அச்சே தின்’!

மும்பை:பாஜக ஆட்சிக்கு வருமுன் இந்தியமக்களுக்கு பொற்காலம் பிறக்கிறது என்று கூறிவந்தது.
மேடைக்கு மேடை நரேந்திரமோடி அச்சேதின் என்று முழங்கிவந்தார்.
பாஜக பொறுப்பேற்று 1460நாட்கள் உருண்டோடிவிட்டன.ஆனால், மோடி கூறிவந்த பொன்னாள் எந்நாள் என்ற கேள்வி மக்கள் மனதில் எழத்தொடங்கியுள்ளது.
2017-18 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 7.2ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8சதவீத வளர்ச்சி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக வளர்ந்துவந்த பொருளாதாரம் 2016ல் அடிவாங்கியது.பணம் வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்த 85%பணம் திரும்பப்பெறப்பட்டது.
கருப்புப்பணத்தை ஒழிக்க சிறப்பு நடவடிக்கை என்று பேசப்பட்ட அந்நடவடிக்கையால் பலன் ஏதுமில்லை. ஆனால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ந்தது.

இந்தியாவின் உற்பத்தி துறையில் 45% அமைப்புசாரா துறையாக இயங்கிவந்தது. நாட்டின் வேலைவாய்ப்பில் 90சதவீதம் பேர் அத்துறையில் வேலைபார்த்துவந்தனர்.
அத்துறை தற்போது 75%பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி துறையில் சுணக்கம், தயாரிப்பு செலவு அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.
டிசம்பர் 2016ல் 60 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு நிதித்துறை வீழ்ச்சியை கண்டது.ஆனால், அமைப்புசாரா தொழில்துறை, அதன் தற்போதைய நிலை குறித்து எவ்வித புள்ளிவிபரங்கள், கணக்கெடுப்புகள் அரசிடம் இல்லை.
எனவே, இதுகுறித்து அரசின் புள்ளிவிபரங்கள், அதனை சார்ந்த பிற சர்வதேச அமைப்புகளின் விபரங்கள் சந்தேகத்தையே எழுப்புகின்றன.

பணம் வாபஸ் திட்டம் பொருளாதாரத்தை சறுக்கவைத்தது என்றால் ஜிஎஸ்டி வரி மற்றொரு இடி என்று வர்ணிக்கப்படுகிறது.
வங்கிகளின் கடன்மோசடி, வருமானம் தராத சொத்துக்கள் அதிகரிப்பு,
புதிய தொழில்நிறுவனங்கள் துவக்கப்படாமல் உள்ளது. அந்நிய முதலீட்டு திட்ட விதிமுறைகள், அடிப்படை கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவை நன்னாளை இந்தியரிடம் இருந்து எட்டாத உயரத்தில் வைத்துள்ளது.
சுதந்திரம் பெற்றதில் இருந்து நாட்டை ஆண்ட எந்த கட்சிதான் நமக்கு நல்ல நாளை தந்துள்ளது என்று நமக்குநாமே ஆறுதல் தேடிக்கொள்ளவேண்டியதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here