அரசியல் ஆட்டம் தொடங்கினார் எடியூரப்பா!

பெங்களூர்: மூன்றுநாள் முதல்வராக இருந்த எடியூரப்பா அரசியல்களத்தில் தனது பகடையை உருட்ட தொடங்கியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.முதல்வர் குமாரசாமி வெள்ளிக்கிழமை தனது பலத்தை நிரூபிக்கிறார்.
சபாநாயகராக ஆளும் கூட்டணி சார்பில் கே.ஆர்.ரமேஷ்குமார் நியமிக்கப்படவுள்ளார்.
தங்கள் தரப்பு சார்பில் பாஜகவும் முன்னாள் சட்ட அமைச்சர் சுரேஷ்குமாரை நிறுத்துகிறது.நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பெங்களூர் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஜக வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய தலைவர்கள், உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என்று உற்சாகமூட்டினர்.கர்நாடகாவில் 3தொகுதிகளுக்கு நடைபெறவேண்டிய இடைத்தேர்தலில் தனக்கு எதிர்முகாமில் உள்ளவர்களில் ஆளுக்கு ஒரு தொகுதியாக பிரித்தளித்துள்ளார் எடியூரப்பா.
3இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால்தான் கர்நாடகாவிலும், டெல்லியிலும் மரியாதை கிடைக்கும் என்ற இக்கட்டான சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here