தலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சனை! தனியாக கிணறு தோண்டும் 70 வயது முதியவர்!!

போபால்: மத்தியப்பிரதேசம் சத்தர்பூர் மாவட்டம் கடுயா என்ற கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.கிராம மக்கள் தண்ணீர் இன்றி வறட்சியால் தவித்துவந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 70 வயது சீதாராம் ராஜ்புட் தனது கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை போக்க தனி ஆளாக கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டார்.
தோண்டப்படும் கிணற்றில் ஏணி அமைத்து தோண்டப்படும் மண்ணை மேலே எடுத்துச் செல்கிறார். இதுகுறித்து பேசிய சீதாராம் எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தனியாக கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன் இதற்கு கிராம மக்கள் யாரும் உதவவில்லை. நான் ஒருவனே செய்து முடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here