Connect with us

National

விராட் கோலியின் சவாலை ஏற்றார் பிரதமர் மோடி!

Published

on

புதுடில்லி: உடற்பயிற்சி குறித்து பிரதமர் மோடிக்கு சவால் விடுத்து கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் சவாலை பிரதமர் மோடி ஏற்று விரைவில் தனது சொந்த வீடியோவை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நடிகர் ஹிருத்திக் ரோஷன், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா ஆகியோருக்கு தம்மை போல் இடைவிடாது 10 முறை புஷ் அப் செய்ய முடியுமா
என சவால் விடுத்தார்.அதற்கான வீடியோவையும் வெளியிட்டார். சவாலை ஏற்ற கிரிக்கெட் வீரர் கோஹ்லி தான் உடற்பயிற்சி செய்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 

தன்னை போல பிரதமர் நரேந்திர மோடி, தனது மனைவி அனுஷ்கா சர்மா, மகேந்திர சிங் தோனி ஆகியோர் செய்ய முடியுமா என பிட்னெஸ் சேலஞ்ச்சிற்கு சவால் விடுத்து
வீடியோவை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் வீராட் கோலியின் சவாலை ஏற்பதாகவும் அதற்கான வீடியோவை விரைவில் வெளியிடுவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator