இணையதள செய்திகளுக்கு கட்டுப்பாடு வருகிறது!

டெல்லி: தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி சமீபத்தில் மாற்றப்பட்டார். அவர் செய்திகள் வெளியிடும் இணையதளங்களுக்கு அனுமதி பெறவேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுவர தீவிரம் காட்டினார்.அத்துறைக்கு புதிதாக பொறுப்பேற்ற ரத்தோர் இணையதளங்களை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று அறிவித்திருந்தார்.தற்போது சமூகவலைத்தளங்கள் வாயிலாக போராட்டச்செய்திகள், வதந்திகள் போன்றவை பரவுவதை தடுக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி நாடு முழுவதும் 716மாவட்டங்களில் சமூக ஊடக கண்காணிப்பு கமிட்டிகள் உருவாக்கப்படுகின்றன.இக்கமிட்டியினர் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சரகத்தின் ஒளிபரப்பு பொறியியல் துறையின் (BECIL) கீழ் இயங்குவார்கள்.
மாநில ஊடகங்கள், செய்தித்தாள்கள், கேபிள் சேனல்கள், வானொலி நிலையங்கள் மற்றும் முக்கிய உள்ளூர் சமூக வலைதள பக்கங்கள் உள்ளிட்டவற்றின் தரவுகளை இந்தக் கமிட்டிகள் சேகரிக்கும்.
அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியானதா என்பதையும் தீவிரமாக கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தத் திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here