தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! முதல்வர் விளக்கம்!!

சென்னை:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
அவரளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், சமூக விரோதிகள் நுழைந்ததாகவும், போலீசார் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.2013ல் ஸ்டெர்லைட் ஆலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
ஆலையை தொடர்ந்து இயக்க மாசு கட்டப்பாட்டு வாரியம் அனுமதிக்கவில்லை.
மக்களின் உணர்வை மதித்து, 2013ல் ஜெயலலிதா எடுத்ததைப்போன்று அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.14 முறை மாவட்ட கலெக்டர், சார் ஆட்சியாளரும், போராட்டக்காரர்களை அழைத்து விளக்கியுள்ளனர்.
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டர் விளம்பரம் செய்துள்ளார்.
இந்த முறை எதிர்க்கட்சிகள், சமூக விரோதிகள் தூண்டுதலால் போராட்டம் நடந்தது.
மக்கள் உணர்வுககு மதிப்பளிக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.
போலீசாரை முதலில் தாக்கினர் இதனையடுத்து போலீசார் முதலில், தடியடி, கண்ணீர்புகை குண்டு வீசினர்.இதனை மீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து வாகனங்களுக்கு தீவைத்து, ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகளுக்குள் வாகனங்கள் தீவைத்து உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.
ஒருவர் தாக்கும் போது அதனை தடுப்பதும், தற்காத்து கொள்ள அதற்கு பதிலடி கொடுப்பதும் இயற்கை.
இதனைத்தான் போலீசாரும் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here