தூத்துக்குடியில் இணைய சேவை துண்டிப்பு! போராட்டத்தை ஒடுக்க துணைராணுவம்!!

சென்னை: வதந்திகள் பரவுவதை தடுக்க தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இணையசேவை துண்டிப்பு, போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவத்தின் உதவியை அரசு கோரியுள்ளது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து 3வது நாளாக பதற்றம் நீடிக்கிறது. அண்ணாநகர், பிரையன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்துவதில்
போலீசார் திணறுகின்றனர்.துணை ராணுவத்தை அனுப்புமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்
கேட்டுக் கொண்டார். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் போராட்டம் குறித்து வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இணைய சேவையை முடக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மே23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5 நாட்கள் மொபைல் போனிலும் இணைய சேவையை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here