தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! ரசிகர் பலி நடிகர் இரங்கல்!!

தூத்துக்குடி: நடிகர் தனுஷ் ரசிகர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
அவருக்கு நடிகர் தனுஷ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.“துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்.” இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்ட ஒன்றிய தனுஷ் ரசிகர்மன்ற நிர்வாகி ரகு என்ற காளியப்பன்.
இவர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இறந்தார்.
பின்னர், இவர் உடலை சூழ்ந்த போலீசார் உயிர் இருக்கிறதா, நடிக்கிறாயா என்று பரிசோதிக்கும் காட்சிகள்
விடியோவாக வந்து பரபரப்பூட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here