ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்!

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது:தலைமை செயலகதில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது, எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் வெளியேறி விட்டார்.
சிறிது நேரத்தில், டிவியில் என்னை முதல்வர் பார்க்க சென்றதாகவும், அதனை முதல்வர் மறுத்ததாகவும் செய்தி வந்தது. கூட்டம் முடிந்த பிறகு, என்னை சந்திக்க வேண்டும் என சொல்லியிருந்தால், எனது அறைக்கு வந்து மனு வாங்கியிருப்பேன்.வேண்டுமேன்றே, நாடகம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, நான் கூட்டத்தில் இருக்கும் போது அறை முன் அமர்ந்து கொண்டு தவறான செய்தியை பரப்பியுள்ளார். பத்திரிகை பரபரப்பு செய்தி வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் அவ்வாறு செய்துள்ளார். முதல்வர் பார்க்கவில்லை என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது
தூத்துக்குடியில் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டாலின் காயமடைந்தவர்களை சந்திக்கிறார்.
சட்டத்தை முதலில் நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here