Connect with us

Cinema

சன்னிலியோன் படத்தில் ரூ.50கோடிக்கு கிராபிக்ஸ்!

Published

on

சென்னை: வீரமாதேவி படத்தின் பட்ஜெட்டில் பாதியளவு கிராபிக்ஸ் காட்சிகளுக்காக செலவிடப்படுகிறது.
தென்னிந்திய மகாராணியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுவரும் வரலாற்று பிரமாண்ட சித்திரம் வீரமாதேவி.ரூ.100கோடி செலவில் இப்படத்தை ‘ஸ்டீவ்கார்னர்ஸ்’தயாரித்துவருகிறது.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.
படக்குழு ஹாலிவுட் சென்று கிராபிக்ஸ் வேலைகளில் கவனம் செலுத்திவருகிறது.
லார்ட் ஆப் தி ரிங்க்ஸ், காட்ஸ் ஆப் எகிப்து படங்களில் கிராபிக்ஸ் வேலைகளை செய்துகொடுத்துள்ள நியூசிலாந்து நிறுவனத்தை அணுகியுள்ளது.

ரூ.50கோடிவரை இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக செலவிடப்படுகிறது.
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வீரமாதேவி’.
இந்தப் படத்தில், சன்னி லியோன் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நாசர், நவ்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.அம்ரிஷ் இசையமைக்க, பொன்செ.ஸ்டீபன் தயாரிக்கிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் இப்படம் தயாராகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator