ஸ்ரீதேவி மரணத்தில் மீண்டும் சர்ச்சை!

மும்பை: நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் தாதா தாவூத் இப்ராஹிமின் தலையீடு இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உறவினர் திருமணத்துக்காக கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, தங்கியிருந்த ஹோட்டலின் குளியலறை பாத்டப்பில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.ஸ்ரீதேவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் திட்டமிட்டகொலை என்று முன்னாள் காவல்துறை அதிகாரி வேத் பூஷண் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமானது.
துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை மட்டுமே தரப்பட்டது.
அவரது ரத்த மாதிரி மற்றும் அவரது நுரையீரலில் எந்தளவு தண்ணீர் இருந்தது போன்ற விபரங்களை அளிக்க துபாய் போலீசார் மறுத்துவிட்டனர்.ஓமன் நாட்டில் ஸ்ரீதேவி பெயரில் ரூ.240 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீதேவி வளைகுடா நாடுகளில் இறந்தால் மட்டுமே பணம் கிடைக்கும்.
எனவே, ஸ்ரீதேவி மரணம் குறித்து அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here