புகைப்பழக்கத்தால் கால் தசைகள் பாதிக்கும்!

டெல்லி:புகைபிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் மட்டுமல்ல. கால் தசைகளும் பாதிக்கப்படுகின்றன.
கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் எல்லன் ப்ரீன் சமீபத்தில் கட்டுரை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், புகைபிடிக்கும் பழக்கத்தால் உடலில் நுரையீரல் மட்டுமின்றி பாதிக்கப்படும் பல்வேறு உடல்பகுதிகள் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

எலிகள் மீது சிகரெட் புகை ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடந்துள்ளது.
அதில் எலிகளின் வளர்ச்சி சிகரெட் புகையால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
அவற்றின் ரத்தக்குழாய்கள் புகையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.குழாயின் அளவு வெகுவாக சுருங்கிவிடுகிறது. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
இதேபோன்று மனித உடலில் கெண்டைக்கால் தசைகள் சிகரெட் புகைப்பதால் பாதிக்கப்படுகின்றன. அத்தசைகளில் உள்ள ரத்தநாளங்கள் குறுகி விடுகின்றன.

இதனால் தசையில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு தசையும் குறுகலாகி விடுகிறது.
புகைப்பழக்கத்தால் ரத்தம், தசை, எலும்பு ஆகியவற்றில் ஊட்டச்சத்து சேருவது தொடர்ந்து குறைந்துவருகிறது.
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here