சவுதிஅரேபியா: சவுதியில் கரன்சி நோட்டுக்கு பதிலாக நாணயங்கள் அதிகளவில் புழக்கத்துக்கு விடப்படுகின்றன. அந்நாட்டு ரிசர்வ் வங்கி இதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

ஒரு ரியால், 2ரியால் மதிப்புள்ள நாணயங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 50ஹலாலா, 25ஹலாலா, 10ஹலாலா, ஒரு ஹலாலா மதிப்பில் நாணயங்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்த மதிப்புடைய கரன்சி நோட்டுக்கள் திரும்பப்பெறப்படும். அனைத்து பண நடவடிக்கைகளையும் நாணயங்களில் மட்டுமே செய்துகொள்ள படிப்படியாக அனுமதிக்கப்படும்.

இதற்காக வங்கிகள், வர்த்தக நிலையங்களில் போதிய ஏற்பாடுகள் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலி கரன்சிகளை தடுப்பது, எளிதாக நாணயங்களை மறுசுழற்சி செய்துகொள்வது, நீண்டகாலம் பயன்படுத்தும் வசதி கொண்டது ஆகிய காரணங்களால் சவுதி அரசு நாணயங்களில் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.