ஒரு கோடி மதிப்பு மதுப்புட்டிகள் அழிப்பு!

அகமதாபாத்:குஜராத் மாநிலத்தில் முழுவீச்சில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
1960ல் மும்பையில் இருந்து தனிமாநிலம் உருவானதில் இருந்தே இந்நடைமுறை உள்ளது.காந்தி பிறந்த மண்ணின் மைந்தர்களை கரைக்க பல்வேறு மது நிறுவனங்கள், கடத்தல்காரர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனால் ஆண்டு தோறும் பலகோடி மதிப்புள்ள வெளிநாட்டு மதுவகைகள், உள்நாட்டு தயாரிப்புகள் பிடிபடுகின்றன. இரு தினங்களுக்கு முன்னர் குஜராத் போலீசார் ஒரு கோடி மதிப்புள்ள மதுப்புட்டிகளை அழித்தனர்.குஜராத் மக்கள் குடிப்பழக்கத்தை வெறுப்பவர்கள். அவர்களை கெடுக்கவந்த அரக்கர்களை பிடித்து நாங்கள் அழிக்கிறோம் என்று ஒரு காவல் அதிகாரி தெரிவித்தார்.தமிழகம், ஆந்திரா, ஹரியானா, மணிப்பூர், மிஜோராம் மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு விலக்கப்பட்டது. கோவாவில் பொது இடங்கள், குறிப்பிட்ட சில பகுதிகளில் மதுவிலக்கு அமலில் உள்ளது. பிகாரில் 2016ல் மதுவிலக்கு அமலாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here