கட்டிய தாலியை கணவனே கழற்றியதால் விபரீதம்! புதுப்பெண் தீக்குளிப்பு!!

சென்னை: ஜீவா, பிரியங்கா இவர்கள் சென்னை கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 20ம் தேதி வீட்டை விட்ட வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்த மறுநாள் ஜீவா வீட்டிற்கு புதுமண தம்பதிகள் சென்றுள்ளனர். இதை எதிர் பார்க்காத பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சுதாரித்த மணமகனின் தாயார் காமட்சி நயவஞ்சகமாக பிரியங்காவிடம் தாலி கட்டிய நாளும் நேரமும் சரியில்லை. 3 மாதம் கழித்து தானே திருமணம் செய்து வைப்பதாக கூறி ஜீவாவை வைத்தே தாலியை கழற்ற வைத்துள்ளார். மேலும் அவரது வீட்டிற்கு அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.தனது கணவர் ஜீவாவை பார்க்கவோ பேசவோ அவரது குடும்பத்தினர் விடதாதல் மனமுடைந்து மண்ணெண்ணயை ஊற்றி தீ வைத்து கொண்டார். அங்கிருந்தவர்கள் பிரியங்காவை மீட்டு கீழப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here