கோலியின் சவாலை ஏற்ற மோடிக்கு புதிய சிக்கல்!!

டெல்லி: பிரதமரின் உடற்பயிற்சி குறித்து சவால் விடுத்திருந்தார் கிரிக்கெட் கேப்டன் கோலி. அவர் சவாலை ஏற்பதாகவும், தனது உடற்பயிற்சி விடியோவை விரைவில் வெளியிடுவதாகவும் பிரதமர் டுவிட்டரில்பதில் தெரிவித்திருந்தார்.தமிழகத்தின் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று 13 உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் அதுகுறித்து வருத்தம் தெரிவிக்காத பிரதமர் கோலியின் சவாலை ஏற்பதற்கான நேரம் இதுவா என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். 56இஞ்ச் அகல மார்பை பார்க்க இங்கு யாரும் தயாரில்லை என்று மீம்ஸ்கள் வெளியாகி உள்ளன.இந்நிலையில், காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் பிரதமருக்கு சவால் விடுத்துள்ளார்.
எரிபொருள் சவால் என்று ராகுல் தனது சவாலுக்கு பெயரிட்டுள்ளார். கோலியின் சவாலை ஏற்றது மகிழ்ச்சி. இதோ என்னுடைய சவாலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.எரிபொருள் விலையை குறையுங்கள். அல்லது காங்கிரஸ் தேசிய அளவில் போராட்டம் நடத்தி உங்களை குறைக்க வைக்கும். இவ்வாறு ராகுல் சவால் விடுத்துள்ளார். பெட்ரோல், டீசல் விலைகள் தினந்தோறும் உயர்ந்து லிட்டருக்கு ரூ.100 தொடவிருக்கின்றன. லிட்டருக்கு ரூ.25விலை குறைக்க முடியுமென்று காங்கிரஸ் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here