முதல்வர் அறை முன் ஸ்டாலின் தர்ணா! தவறான தகவல் பரப்புவதாக முதல்வர் குற்றச்சாட்டு!

சென்னை: சபாநாயகர் தலைமையிலான பேரவை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தது.முதல்வரை சந்திக்க அனுமதி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கேட்டனர். இதற்கு அனுமதி கிடைக்கவில்லை.முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து முதல்வர் அறை முன்பு அமர்ந்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காவல்துறையே காராணம் என திமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். போலீசார் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தலைமை
செயலகத்தில் இருந்து வெளியே தூக்கி வந்தனர்.ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்களை கைது செய்தனர். முதல்வரை காண அனுமதி மறுக்கப்பட்டது குறித்து திமுகவினர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அவை தொடங்குவதற்கு முன்போ அல்லது அவை முடிந்த பிறகோ ஸ்டாலின் என்னை சந்தித்து இருக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here