பப்ளிக் டிவி ’ஹீரோ’!

பெங்களூர்:தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது 24மணிநேர கன்னட செய்தி தொலைக்காட்சி பப்ளிக் டிவி.டிவிக்களின் பார்வையாளர்கள் குறித்து வாரந்தோறும் புள்ளிவிபரம் அறிவிக்கிறது பார்க் என்ற அமைப்பு.
இந்த அமைப்பு இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளை, விளம்பர ஏஜென்சிகள் கூட்டமைப்பு, இந்திய விளம்பரதாரர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்கியதாகும்.கடந்த 20வது வாரத்தில் கர்நாடகா மாநிலத்தில் டிவி பார்வையாளர்களின் புள்ளிவிபரத்தை பார்க் வெளியிட்டுள்ளது.

அதில் மாநிலம் முழுவதும் ’பப்ளிக் டிவி’ 239%மக்கள் கூடுதலாக பார்த்துள்ளனர்.

தேர்தல் செய்திகளுக்காக, பப்ளிக் டிவியின் நிர்வாக ஆசிரியர் ரங்கநாத் தலைமையில் குருஷேத்திரம் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, இழுபறி முடிவு என்று அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பப்ளிக்டிவி ஒளிபரப்பியும், விசேஷ தகவல்களை உடனுக்குடன் தந்தும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.கர்நாடகா, பெங்களூர் நகரம், பிற நகர்ப்பகுதிகள், ஊரகப்பகுதிகள், கிராமப்புறப்பகுதிகள் என்று மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் 200சதவீதத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்தவாரம் பெற்றுள்ளது பப்ளிக் டிவி.

பெங்களூர் நகர்ப்பகுதியில் முந்தைய வாரத்தை விட கடந்தவாரம் 299% பேர் கூடுதலாக பப்ளிக் டிவி செய்திகளை பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here