நடிகையின் கண்ணீர்! வைரல் விடியோ!!

ஹைதராபாத்: தெலுங்கு நடிகை ஹரி தேஜா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர். சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் பார்க்க ஹைதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்றார்.தியேட்டரில் இவர் தந்தையார் உட்காருவதற்கு சரியான இடம் கிடைக்கவில்லை.
எனவே, காலியாக இருந்த மற்றொரு சீட்டுக்கு சென்று அமர்ந்தார். அந்த சீட் அருகே ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார்.அப்பெண்ணின் தாயார், நடிகையிடம் சண்டையிட்டார். வேறொரு நபர் தன் பெண் அருகில் இருப்பது தங்களுக்குசங்கடம் தருகிறது என்றார். இதற்கு ஹரிதேஜா சினிமா கொஞ்சநேரத்தில் முடிந்துவிடும் அதுவரை இருந்துகொள்ளட்டும். வயதில் பெரியவர்தானே என்றெல்லாம் கூறி அப்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றார்.
அதற்கு அப்பெண் சம்மதிக்கவே இல்லை.நீங்கள் நடிகை யாருடன் அமர்ந்தும் படம் பார்க்கலாம் நாங்கள் அப்படியில்லை என்று அவமானப்படுத்தியுள்ளார். படம் முடியும் வரை தொடர்ந்து முணுமுணுத்துக்கொண்டே இருந்துள்ளார். தியேட்டரில் தனக்கு நேர்ந்த அவமானத்தை கண்ணீருடன் செல்பி விடியோவாக பதிவிட்டுள்ளார் ஹரி தேஜா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here