மாணவர்களிடம் பிடிபட்டது 200கிலோ ’பிட்’

குஜராத்: பிளஸ்2 தேர்வு மையத்தில் மாணவர்களிடம் இருந்து 200கிலோ ’பிட்’ பிடிபட்டன. அகமதாபாத்தில் உள்ள சுவாமி நாராயணா குருகுலம் பள்ளியில் மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு அரசு தேர்வுகள் நடந்தன. அதில் தேர்வுக்கூட வளாகம் முழுவதும் பிட் பேப்பர்கள் காட்சியளித்தன.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அவர்கள் அங்கு நடந்த 12ம் வகுப்பு அரசுத்தேர்வில் முறைகேடுகள் நடக்கா வண்ணம் தீவிரமாக கண்காணித்தனர்.தேர்வறைகள் அனைத்தில் இருந்தும் மாணவர்களிடம் பிட் பேப்பர்களை கைப்பற்றினர்.
தேர்வுகள் முடிந்ததும் பிட் பேப்பர்களை எடைக்குப்போட்டதில் 200கிலோ இருந்தது.பிட் அடித்தது தொடர்பாக 15மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுவாமி நாராயணா குருகுலம் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி 2008ம் ஆண்டு முதல் அரசுத்தேர்வுகள் மையம் இயங்க தடை பெற்றிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக இப்பள்ளியில் அரசுத்தேர்வுகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here