இறந்த தாயின் உடலை பாதுகாத்து பென்சன் மோசடி!

வாரனாசி:பென்சன் பணத்தை தொடர்ந்து வாங்க தாயின் உடலை 5மாதமாக சகோதரர்கள் பாதுகாத்து வந்துள்ளனர்.
வாரனாசி துர்காகுண்டம் பகுதியில் வசித்துவந்தவர் அமரதேவி.

இவரது கணவர் தயாபிரசாத் கஸ்டம்சில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்ததால் அமரதேவி ரூ.40ஆயிரம் பென்சன் பெற்றுவந்தார்.
கடந்த 5மாதங்களுக்கு முன் அவர் இறந்தார்.
அவரது மகன்கள் ஐந்துபேரும் அமரதேவியின் உடலை வேதிப்பொருட்களை பூசி பாதுகாத்துவந்தனர்.மாதந்தோறும் அவர் கையெழுத்தை போலியாக போட்டு பென்சன் பணத்தை வாங்கிவந்தனர்.
அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் எழுவதாக புகார் தெரிவித்தனர்.
போலீசார் சோதனையில் அமரதேவியின் உடல் சிக்கியது. அவரது 5மகன்களும் கைதாயினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here